Saturday, 11 January 2014

pongal vizha

நேற்று எங்கள் பள்ளியில் பொங்கல் விழா  கொண்டாடினோம் ......

பள்ளி குழந்தைகள் அனைவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப அரிசி , வெல்லம் , நெய் , பாசிபருப்பு , ஏலக்காய், முந்திரி கொண்டு வந்து குவித்து விட்டனர்.    ஆசிரியர்களின் பங்காக நாங்கள் பொங்கல் பொங்குவதற்கு பாத்திரங்களும் ,  விறகும் வாங்கி  பள்ளி மைதானத்தில்  பொங்கல் வைத்தோம் .

காலை பத்து  மணிக்கு துவங்கிய வேலை மதியம்   ஒரு மணியளவில் முடிந்தது.

 குழந்தைகளோடு சேர்ந்து  பொங்கல் சமைத்து சாப்பிட்டது ரொம்ப  மகிழ்ச்சியாக இருந்தது.

 குழந்தைகள் யாவரும் தமிழ்நாட்டு உடையான பாவாடை சட்டை , வேஷ்டி சட்டையுடன் வந்து ஜமாய்த்து விட்டனர்.

பள்ளி முழுதும் வண்ணத்துப் பூச்சிகளாய்  பறந்துக் கொண்டிருந்தனர் . தங்கள் வீட்டு விழா போல் பெரிய மனுஷத் தோரணையில் வேலைகளை    கவனித்தனர்.

 குழந்தைகள் கொடுத்த ஊக்கமும் மகிழ்ச்சியும் எங்களுக்கு  500  பேருக்கு சமைத்ததில் சுமையே தெரியவில்லை.

அடுப்பு பற்ற வைத்ததிலிருந்து,  கடைசியில் பாத்திரங்கள் கழுவும் வரை பொறுப்பாய் ஒரு சில மாணவர்கள் எங்களோடு துணை நின்றனர்.

ஆசிரியர்கள் அடுப்பருகே நின்றிருந்ததால் ஒரு சில  மாணவர்கள் சிறிய குழந்தைகளை பத்திரமாய் , அமைதியாய் பார்த்துக் கொண்டனர்.

 இந்த பொறுப்புகளை எல்லாம் அவர்களே  எடுத்துக் கொண்டு  செயல்பட்டது   என்னை ஆச்சரியப் படுத்தியது.

ஒவ்வொரு முறையும் குழந்தைகளுக்கு நாம் நல்ல வழிக்காட்டியாக  இருந்தால் மட்டும்  போதும் என்று அவர்கள் நிரூபித்து விடுகின்றனர்.

 எல்லோரும் எல்லா வேலைகளை பகிர்ந்துக் கொண்டால் எந்த வேலையும் எளிது என்று குழந்தைகள் எங்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம் நேற்று.

பொங்கல் கொண்டாடும் இந்த நாளில்  மீண்டும் ஒரு  பாடம் கற்றுக் கொடுத்த  குழந்தைகளுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்





No comments:

Post a Comment