Thursday, 16 January 2014

5 நாட்கள் பொங்கல் விழா விடுமுறைக்கு பின் நாளை பள்ளி திறக்கிறது.

விடுமுறையில் வீட்டு வேலைகள் நெரித்தாலும் வீட்டிலிருப்பது ஒரு தனி  சுகம் தான்.

நாளை ஒரு நாள் பள்ளிக்கு விடுப்பு  எடுத்தால் சனி    ஞாயிறு  சேர்ந்து மேலும் மூன்று நாட்கள் வீட்டில் இருக்கலாம்.......

ஆசையாக இருந்தது......

ஆனால் பள்ளி முதல்வராக இருந்து விடுப்பு எடுத்தல் தவறு என்று ன்  கடமை உணர்வு அ்றிவுறித்தினாலும்  , மனசு அடம் பிடித்தது......

யோசித்தபடியே வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தேன்.  என் செல் பேசி அழைத்தது. இந்த நேரத்தில் யார் அழைப்பது என்று யோசித்தபடியே எடுத்தேன்.

'ஹலோ  மேடம்' , என்று மழலைக் குரல்........

'யாருமா ?' என்றேன்.
'
நான் தான் ........ first  std  படிக்கிறேன்.  எனக்கு நாளைக்கு பர்த்டே ..... உங்களுக்கு ஒரு book வாங்கி வச்சிருக்கேன், நிறைய சாக்லேட் வச்சிருக்கேன் ....
..[எங்கள் பள்ளியில் குழந்தைகள் தங்கள் பிறந்த  நாள்  அன்று  பள்ளிக்கு ஏதாவது ஒரு புத்தகமோ அல்லது ஒரு  செடியோ அன்பளிப்பாக கொடுக்கவேண்டும் ]  லீவு போடாம வந்திடுங்க மேடம் , குட் நைட்' ...... என்று போனை கட் செயதான்.

லீவு போடும் எண்ணத்தை கைவிட்டு ,    குழந்தையின் அன்பை நினைத்து , மகிழ்ச்சியாய்  இந்த விஷயத்தை பதிவு செய்து விட்டு  உறங்கச்  செல்கிறேன் .....
 இரவு வணக்கம்......   



   

No comments:

Post a Comment