நான்கு வயது கெபின் படுசுட்டி....
ரொம்ப கஷ்டப்பட்டு ஒரு பெரிய பள்ளியில் சேர்த்திருந்தனர். அந்த பள்ளியில் இடம் கிடைப்பது பெரிய விஷயம். குழந்தைகளுக்கு தேவையான எல்லா விஷயங்களும் அங்கு கிடைக்குமாம். சிறந்த பயிற்சி அளிக்கப்பட்ட ஆசிரியர்கள் ,குளிர்சாதனம் வைக்கப்பட்ட வகுப்பறைகள், சத்துள்ள உணவு போன்றவையும் அதில் அடங்கும். பள்ளிக் கட்டணமும் அதிகம்.
என்ன பிரச்சனை என்றால், 6 மாதம் பள்ளிக்கு, மக்கர் பண்ணாமல் ஒழுங்காக போனவன், திடீரென்று போக மாட்டேன் என்று அடம் பிடிக்க ஆரம்பித்தான். தினமும் பள்ளிக்கு அழுகை , ஆர்ப்பாட்டம் தான். குண்டுகட்டாக வேனில் திணிக்கிறார்கள் . மாலை வீடு திரும்பும் வரை கவலைதான்... அவன் அம்மா , பள்ளியிலிருந்து எப்போது போன் வருமோ என்று போனை கையிலேயே வைத்திருக்கிறார், பாவம்.
என்னவென்று கேட்டால் சொல்லவும் மாட்டேங்கறான். ஸ்கூல்ல என்ன நடக்கிறது, பையன் எப்படி நடந்துக் கொள்கிறான் என்று ஆசிரியர்களிடமும் கேட்க அனுமதியும் இல்லை, அவ்வளவு பெரிய பள்ளி அது......
யார் கேட்டாலும், எனக்கு ஸ்கூலுக்கு போக பிடிக்கலை என்பதை தவிர வேறு எதுவும் அவன் வாயிலிருந்து வராது...
அவனது சுட்டித்தனமும் மெல்ல ஒளிந்துக் கொண்டிருந்தத்து.....
உனக்கு ஏன் ஸ்கூல் பிடிக்கலை..? சொல்லு நான் போய் ஸ்கூல்ல பேசறேன் என்றேன்....
அவன பிஸ்கேட்டை கடித்தபடியே சாதாரணமாய் சொன்னான்....'ஆண்ட்டி நீங்களாம் எங்க ஸ்கூலுக்குள்ள வரவேமுடியாது....
சரி அப்ப நீ சொல்லு,,,,,ஏன் பிடிக்கலை...
ம்ஹும் பதிலில்லை.... பேசாமல் கையிலிருந்த காரை ஆராய்ந்துக் கொண்டிருந்தான்....
'இப்படி தான் மேடம், எதைக் கேட்டாலும் பதிலே சொல்லாம இருக்கான்' என்றார் அவனது தாய்.
'சரி நீ பதில் சொல்ல வேண்டாம்... நீ கேள்வி கேளு. நான் பதில் சொல்றேன்....' என்றேன்...
அவன் முகம் பளிரென்று மாறியது....
எங்க மிஸ் தான் கேள்வி கேப்பாங்க. நாங்கள்ளாம் பதில் சொல்லணும்... நீங்க கேள்வி கேட்க சொல்றீங்க? என்றான். நான் சிரித்தேன் மெல்ல....
'எதாச்சும் கேள்வி கேக்கணும்னு எழுந்து நின்னா அடிச்சு உட்காரச் சொல்லிடுவாங்க.... எப்ப பார்த்தாலும் வாயில விரல்ல வச்சிட்டு உட்காரச் சொல்றாங்க ஆண்ட்டி.... நீங்களும் மிஸ் தானெ ஆண்ட்டி..... நீங்க மட்டும் கேள்வி கேட்க சொல்றீங்க..? என்று மலர்ந்தான்
ம் சரி... உனக்கு தண்ணி குடிக்கணும், ரெஸ்ட் ரூம் போகணும்னா எப்படி கேட்பே? என்றேன்..
ம் ஹூம் தண்ணி குடிக்க, ரெஸ்ட் ரூம் போகனு எல்லாத்துக்கும் ஒரு டைம் வச்சிருக்காங்க ஆண்ட்டி..அப்போ தான் செய்யணும். சாப்பிடும் போது கூட பேசக்கூடாது. அழூகையா வரும்.... பசிக்கவே பசிக்காது, அப்போ சாப்பிடக்கூடாது... ஒன் டாய்லெட் வரவே வராது அப்போ போக சொல்லுவாங்க.
காலைல போட்ட டிரஸ் ஸ்கூல் விடற வரைக்கும் கலையாம இருக்கணும். கலைஞ்சா அடிப்பாங்க.... நடக்கும் போது மண்ணுல பட்டு ஷூ அழுக்காக கூடாது.... என்ன செஞ்சாலும் பயமா இருக்கு ஆண்ட்டி...
. அதனால நான் என் இடத்தை விட்டே எழுந்திருக்க மாட்டேன், சாயங்காலம் பெல் அடிக்கிறவரை.
எனக்கு நிறைய ஃபெரண்ட்ஸ் கிடைச்சிருக்காங்க ஸ்கூல்ல ஆனா பேசக் கூடாது, விளையாடக் கூடாதாம்...
எனக்கு பிடிக்கவே இல்லை இந்த ஸ்கூல்.
அம்மாவும் மிஸ் மாதிரியே 'படி, எழுது, பேசாதே'னு சொல்றாங்க....
நான் படிக்காம் கார் டிரைவராயிடுறேன் ஆண்ட்டி. அம்மாகிட்ட சொல்லுங்க ப்ளிஸ் என்று பொம்மை காரை ஓட்டத் துவங்கினான்....
எவ்வளவு பெரிய உண்மை?
ஸ்கூலுக்கு போக மாட்டேன் என்று அடம் பிடிக்கும் கெபின் மீது தவறா? பெரிய பள்ளியின் மோகத்தில் அலையும் பெற்றோர் மீது தவறா?
கல்விச் சூழல் மீது தவறா?