Sunday, 26 January 2014
Thursday, 16 January 2014
5 நாட்கள் பொங்கல் விழா விடுமுறைக்கு பின் நாளை பள்ளி திறக்கிறது.
விடுமுறையில் வீட்டு வேலைகள் நெரித்தாலும் வீட்டிலிருப்பது ஒரு தனி சுகம் தான்.
நாளை ஒரு நாள் பள்ளிக்கு விடுப்பு எடுத்தால் சனி ஞாயிறு சேர்ந்து மேலும் மூன்று நாட்கள் வீட்டில் இருக்கலாம்.......
ஆசையாக இருந்தது......
ஆனால் பள்ளி முதல்வராக இருந்து விடுப்பு எடுத்தல் தவறு என்று ன் கடமை உணர்வு அ்றிவுறித்தினாலும் , மனசு அடம் பிடித்தது......
யோசித்தபடியே வேலைகளை பார்த்துக் கொண்டிருந்தேன். என் செல் பேசி அழைத்தது. இந்த நேரத்தில் யார் அழைப்பது என்று யோசித்தபடியே எடுத்தேன்.
'ஹலோ மேடம்' , என்று மழலைக் குரல்........
'யாருமா ?' என்றேன்.
'
நான் தான் ........ first std படிக்கிறேன். எனக்கு நாளைக்கு பர்த்டே ..... உங்களுக்கு ஒரு book வாங்கி வச்சிருக்கேன், நிறைய சாக்லேட் வச்சிருக்கேன் ....
..[எங்கள் பள்ளியில் குழந்தைகள் தங்கள் பிறந்த நாள் அன்று பள்ளிக்கு ஏதாவது ஒரு புத்தகமோ அல்லது ஒரு செடியோ அன்பளிப்பாக கொடுக்கவேண்டும் ] லீவு போடாம வந்திடுங்க மேடம் , குட் நைட்' ...... என்று போனை கட் செயதான்.
லீவு போடும் எண்ணத்தை கைவிட்டு , குழந்தையின் அன்பை நினைத்து , மகிழ்ச்சியாய் இந்த விஷயத்தை பதிவு செய்து விட்டு உறங்கச் செல்கிறேன் .....
இரவு வணக்கம்......

Monday, 13 January 2014
தை பொறந்தா வழி பொறக்கும் - என்ற தெம்பிலே
கையலுக்க பாடுபட்டோம் மண்ணை நம்பியே !
நம் உழவிற்கு உறுதுணையாய் இருக்கும் மண், மழை, சூரியன் , ஏர் , மாடு என்று எல்லாவற்றையும் நன்றியோடு வணங்கும் நாளாக தை மாதத் திருநாள் கொண்டாடப் படுகிறது .
ஆனால் மாட்டோடு மாடாக உழைத்துக் கொண்டிருக்கும் உழவர்களை வணங்கும் விதமாய் எங்கள் பள்ளியில் பொங்கலிட்டு,
உழவர்களின் வாழ்வு நலமும் , உடல் நலமும் சிறக்க வேண்டுதலோடு பொங்கல் விழாவினை இனிதே முடித்தோம்.

Saturday, 11 January 2014
pongal vizha
நேற்று எங்கள் பள்ளியில் பொங்கல் விழா கொண்டாடினோம் ......
பள்ளி குழந்தைகள் அனைவரும் அவரவர் விருப்பத்திற்கேற்ப அரிசி , வெல்லம் , நெய் , பாசிபருப்பு , ஏலக்காய், முந்திரி கொண்டு வந்து குவித்து விட்டனர். ஆசிரியர்களின் பங்காக நாங்கள் பொங்கல் பொங்குவதற்கு பாத்திரங்களும் , விறகும் வாங்கி பள்ளி மைதானத்தில் பொங்கல் வைத்தோம் .
காலை பத்து மணிக்கு துவங்கிய வேலை மதியம் ஒரு மணியளவில் முடிந்தது.
குழந்தைகளோடு சேர்ந்து பொங்கல் சமைத்து சாப்பிட்டது ரொம்ப மகிழ்ச்சியாக இருந்தது.
குழந்தைகள் யாவரும் தமிழ்நாட்டு உடையான பாவாடை சட்டை , வேஷ்டி சட்டையுடன் வந்து ஜமாய்த்து விட்டனர்.
பள்ளி முழுதும் வண்ணத்துப் பூச்சிகளாய் பறந்துக் கொண்டிருந்தனர் . தங்கள் வீட்டு விழா போல் பெரிய மனுஷத் தோரணையில் வேலைகளை கவனித்தனர்.
குழந்தைகள் கொடுத்த ஊக்கமும் மகிழ்ச்சியும் எங்களுக்கு 500 பேருக்கு சமைத்ததில் சுமையே தெரியவில்லை.
அடுப்பு பற்ற வைத்ததிலிருந்து, கடைசியில் பாத்திரங்கள் கழுவும் வரை பொறுப்பாய் ஒரு சில மாணவர்கள் எங்களோடு துணை நின்றனர்.
ஆசிரியர்கள் அடுப்பருகே நின்றிருந்ததால் ஒரு சில மாணவர்கள் சிறிய குழந்தைகளை பத்திரமாய் , அமைதியாய் பார்த்துக் கொண்டனர்.
இந்த பொறுப்புகளை எல்லாம் அவர்களே எடுத்துக் கொண்டு செயல்பட்டது என்னை ஆச்சரியப் படுத்தியது.
ஒவ்வொரு முறையும் குழந்தைகளுக்கு நாம் நல்ல வழிக்காட்டியாக இருந்தால் மட்டும் போதும் என்று அவர்கள் நிரூபித்து விடுகின்றனர்.
எல்லோரும் எல்லா வேலைகளை பகிர்ந்துக் கொண்டால் எந்த வேலையும் எளிது என்று குழந்தைகள் எங்களுக்கு கற்றுக் கொடுத்த பாடம் நேற்று.
பொங்கல் கொண்டாடும் இந்த நாளில் மீண்டும் ஒரு பாடம் கற்றுக் கொடுத்த குழந்தைகளுக்கு நன்றி சொல்ல கடமை பட்டிருக்கிறேன்

Subscribe to:
Posts (Atom)