முதல் வகுப்பு படிக்கும் ஹாஜிராவைப் பற்றி இன்று சொல்லப் போகிறேன் .
நான் வியந்து வியந்து பார்க்கக் கூடிய குழந்தை அவள். மிகச் சரியாக ஆட்களை எடைப் போ ட்டு வைத்திருப்பாள். அவள் முன் யாரும் தவறு செய்து விட முடியாது. மனதில் உள்ளதை சொல்லி விடுவாள். படிப்பிலும் படு சுட்டி.
எல் . கே .ஜி படிக்கும் போது ஒரு நாள் இந்தப் ப்ள்ளிக்கூடம் எனக்கு பிடிககலை .நான் வீட்டிற்கு போகிறேன் என்று அழுதுக் கொண்டிருந்தாள்.
நான் மதியம் ரவுண்ட்ஸ் போகும் போது அவளின் வகுப்பு ஆசிரியர் என்னிடம் ,; மேடம் ஹாஜிரா காலையிலிருந்து இன்னும் அழுதுக் கொண்டிருக்கிறாள். கேட்டாலும் சொல்ல மாட்டேன் என்கிறாள். அடித்தும் விட்டேன் . கொஞ்சியும் பார்த்து விட்டேன்.. இப்படியேத்தான் அழுதுக் கொண்டிருக்கிறாள். , என்றார். நான் உடகே அவளை அருகில் அழைத்து சமாதானம் செய்யத தொடங்கினேன்.
ம்ஹூம் சரி வரவில்லை . அழுது அழுது முகம் வீங்கிப் போய இருந்தது ' சரி வாங்க வீட்டுக்குப் போகலாம் என்றும் கூப்பிட்டுப் பார்த்தேன். வேண்டாம் என்று மறுபடியும் அழ ஆரம்பித்தாள் , அம்மாவிட ம் போகணு ம்
என்று தானே எல்லா குழந்தைகளும் அழும் .....இவளுக்கென்ன வந்தது ..... நான் அவளின் ஷூ சாக்ஸ் கழற்றி பார்த்தேன் ஏதேனும் பிரச்சனை இருக்கிறதா என்று... எதுவும் இல்லை.
பின்னர் அவளை தனியாக அழைத்து கேட்டேன் , உனக்கு ஏன் நம்ம பள்ளி பிடிக்கலை என்று சொல்லு என்றேன் உடனே அவள் மிஸ்ஸை அடிக்க வேண்டாம் என்று சொல்லுங்கள் நான் சொல்றேன் என்றாள் . அப்படியே அவளுக்கு உத்திரவாதம் கொடுத்தேன்.
அவள் மெதுவாக என்னிடம் ,' என் அழரேனு கேக்க மாட்டேங்கிறாங்க . சாயங்காலம் வீட்டிற்கு போகலாம் போகலாம்னு சொல்லி அடிக்கிறாங்க மிஸ்.
நான் அம்மாகிட்டே போகணும்னு சொல்லவே இல்லை. இந்த ஸ்கூல்ல [வகுப்பில் ] காத்தே வரலை. ரெண்டு fan இல்லை. எனக்கு ரொம்ப வேர்க்குது ..அதை மிஸ் கேக்கவே மாட்டேங்கிறாங்க ...நீங்க சொல்லுங்க மேடம் ,' என்று பெரிய மனுஷத் தோரணையில் சொன்னாள் . எனக்கு சரியான அதிர்ச்சி
....எவ்வளவு பெரிய தவறு செய்கிறோம் நாம். குழந்தைகளை கேட்காமல் நாமே முடிவு செய்து விடுகிறோம் நிறைய விஷயங்களை ...
உடனே அவளை காற்று வரும் இடத்தில் உட்கார வைத்தேன் .உடனே மின்விசிறி இரண்டு வாங்கி மாட்ட ஏற்பாடு செய்தேன்.... இது போல் தானே ம்ற்ற குழந்தைகளுக்கும் ...... இவள் வாய் திறந்து பேசி விட்டாள் ....

ஹாஜிரா... பெரிய மனுஷி தான்.. நம்மை போன்ற பெரியவர்கள் இது போல் அடிக்கடி குழந்தைகள் ஆகி விடுகிறோம் பெரிய மனிதர்களின் (ஹாஜிரா போன்ற குழந்தைகள்) முன்பு...
ReplyDeleteirandu visayangal yenakku pulappadukindran. !. Kuzanthaigal thelivaga irukindrana. 2.nee ivvalavu arumaiyaga yellvatraiyum pathivu seikirayi.
ReplyDelete