நேற்று மதியம் பத்தாம் வகுப்பில் பாடம் நடத்திக் கொண்டிருக்கும் போது , LKG மிஸ் ஒரு பெண்ணைத் தூக்கிக் கொண்டு பதைத்து ஓடி வந்தார். அந்த குழந்தை தன் கைகளால் தன் கண்களை மூடிக் கொண்டிருந்தாள் . வகுப்பை விட்டு வெளியே வந்து பார்த்தேன். "என்ன ஆச்சு", என்றேன். சக்தி பாலா இவளோட கண்ணுல பென்சிலால குத்திட்டான் மேடம் :, என்றார்.
நான் அவளை வாங்கி என் அறைக்குள் தூக்கிச் சென்றேன்.
ஒரு கையால் தன் வலது கண்ணை மூடிக் கொண்டே அவள் என்னிடம் , ;மேடம் என்னை இறக்கி விடுங்க நான் நடந்து வர்ரேன் எனக்கு ஒண்ணும் இல்லே ' என்றாள் , எனக்கு ஆச்சரியம் இந்த குழந்தைக்கு எவ்வளவு மனத் தைரியம் ! அவளை இறக்கி விட்டேன் . அவள் கைகளை எடுத்து கண்ணை பார்த்தேன். கண் இரத்தச் சிவப்பாய் இருந்தது. எங்கு பென்சில் குத்தப்பட்டிருக்கிறது என்று பார்த்தேன். கண் ஓரத்தில் வெள்ளை படலத்தில் குத்தியிருந்தான். உடனடியாக மருத்துவரிடம் அழைத்துப் போக வேண்டும் . அவளின் தந்தைக்கு போன் செய்தேன். அவர் வெளியூரில் இருந்தார். அவரிடம் பக்குவமாய் நடந்ததை கூறி அவர் மனைவியை அனுப்பும்படி சொன்னேன்.
அந்த குழந்தைக்கு முதல் உதவி செய்து படுக்கவைத்து விட்டு அவள் வகுப்பிற்கு சக்திபாலாவை பார்க்கப் போனேன் .
நான் நினைத்த மாதிரியே அதற்குள் ஆயாவிலிருந்து ஆசிரியர் வரை அவனை அதட்டி பயமுறுத்தி வைத்திருந்தனர். நல்லவேளை எங்கள் பள்ளியில் யாரும் கட்டாயமாக அடிக்ககூடாது என்று பள்ளி துவங்கிய நாளிலிருந்து நிர்வாகம் சொல்லி இருப்பதால் யாரும் எந்த வகுப்பின் மாணவர்களையும் அடிப்பதில்லை.
நான் அவனைப் பார்த்தப் போது அவன் ரொம்ப பயந்து போயிருந்தான் . அழுதும் கொண்டிருந்தான் . ; இங்கே கிட்டே வா' என்றேன் . வரமாட்டேன் என்று தலையாட்டினான் .
நான் அவனிடம் சென்று அவனருகில் அமர்ந்தேன் . நான் ஒண்ணும் பண்ணலே அவ தான் நா எழுதும் போது என் கன்னத்தில் கிள்ளினா, எனக்குகோவம் வந்தச்சா அதான் அவளை குத்தினேன்"என்றான் தானாக ..........
எனக்கு பாவமாக இருந்தது ....அந்த குழந்தையையும் என்ன செய்வது. ?
சரி இனி இப்படிலாம் செய்யக் கூடாது .. ஆனா ஒண்ணு மட்டும் சொல்லு உனக்கு ஏன் இப்படி கோவம் வந்தது பென்சில்ல குத்தினா எப்படி வலிக்கும் தெரியுமா? என்று சொல்லிவிட்டு எழுந்தேன் ............
அவளுக்கு இரத்தம் வருதா ? மிஸ் என்று தயக்கத்தோடு கேட்டான் ....'இல்லை ',என்றேன்.
'இல்லையா ?' என்று அதிருப்தியோடு கேட்டு விட்டு தனக்குள் எதோ முனக துவங்கினான் .......
மூன்று வயது பையனின் கோவத்தோடு அவனின் எண்ணத்தின் ஆபத்தையும் உணர்ந்தவளாய் அவனின் தந்தையிடம் கண்டிப்பாக பேசவேண்டும் என்று முடிவோடு நகர்ந்தேன். இப்படியே வளர்ந்தால் இவனின் வாழ்க்கை எப்படி இருக்கும் ?
அந்த பையனின் தவறா? அவனின் பெற்றோர்களின் வளர்ப்பில் தவறா?

thank u teacher
ReplyDelete