எங்கள் பள்ளி ஆண்டு விழாவினை குழந்தைகள் சிறப்பாக நடத்தி விட்டனர்.
ஆம். வழக்கம் போல ஆசிரியர்கள் நாங்கள் ஆச்சரியத்தில் வாய் திறந்து
முழித்துக் கொண்டிருந்தோம்.
கலைநிகழ்சசி க்கான பயற்சி வெறும் 7 நாட்கள் மட்டுமே கொடுத்தோம்.
விழாவின் முதல் நாள் வரை மேடையில் மாணவர்கள் சொதப்பிக் கொண்டிருந்தனர் .
ஆனால் விழா அன்று எல்லோரையும் அசத்திவிட்டனர்.
ரோபோ நடனத்தில் பெரிய மாணவர்கள் அசத்தினர் என்றால் சிறிய குழந்தைகள் பட்டாம் பூச்சிகளாய் மேடையில் பறந்து ஆச்சரியப் படுத்தி விட்டனர்.
இதெல்லாம் விட மாணவர்கள் மேடையை கையாண்ட விதம் என்னை யோசிக்க வைத்து விட்டது.
மேடையில் ஆடும் போது உடை தடுக்கி கீழே விழ இருந்த சக மாணவியை கைப் பிடித்து தொடர்ந்து ஆட வைத்தது ;
ஆசிரியர் சரியாக உடை மாட்டி விடாமல் கீழே நழுவி நழுவி வந்துக் கொண்டிருந்த தன் ஆடையை ஒரு கையால் பிடித்துக் கொண்டே கடைசி வரை ஆடி முடித்தது;
இப்படி ஏராளமாய் குழப்பங்களை மேடைக்கு வெளியே பார்த்துத் தவித்துக் கொண்டிருந்த எங்களுக்கு , அழாமல் , தவித்து நிற்காமல் , இயல்பாய் அழகாய் மேடை மேலாண்மையை கற்றுக் கொடுத்து விட்டனர் குழந்தைகள் .

குழந்தைகளுக்கு வாழ்த்துக்கள்
ReplyDelete