Tuesday, 16 August 2011

KaDaSi KaDiThAm


இனிய மகளே போகிறேன்..... 
மகளாய் மட்டுமே வளர்கிறாயே 
நிரம்ப கவலைப்பட்டேன். 
இன்று எல்லாமுமாய் உணர்த்திவிட்டாய் 
ஒரு தந்தையின் தவறுகளை..... 
ஆனாய்,கணவனாய் மட்டுமில்லை 
தந்தையாகவும் இருந்திருக்க வேண்டும். 
தலை குனிந்துப் போகிறேன் மகளே! 
வார்த்தைகளை வெறுப்போடு கோர்த்து 
என் முகத்தில் உமிழ்ந்து விட்டாயே? 
என் தனிப்பட்ட விஷயங்களை 
உன்னிடம் பகிர்தலுக்கான நேரம் கூட 
ஏன் தரவில்லை மகளே? 
புரியாமல் விடைபெறுகிறேன்... 
ஆனாலும் மகளே மன்னித்துவிடு.... 
இனி என் நிமித்தம்-நீ 
யாரிடமும் அவமானப்படவேண்டாம்! 
என்னால் உன் அம்மாவுடன் 
வாய்சண்டை எதுவும் வராது! 
வார இறுதிகளில்-நமக்குள் 
மன இறுக்கம் இருக்காது! 
மறு ஜனனம்-நம்பிக்கையில்லை 
எதுவும் எடுத்துச் செல்லவில்லை எனக்காக..... 
விட்டுப் போகிறேன் உனக்காக....... 
நாம் அன்பான குடும்பத்தை- 
தலைவனாய் கவனித்துக் கொள்வாய் 
நம்பிக்கையோடு போகிறேன்......... 
 

No comments:

Post a Comment